✅👉தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம்(31) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் (நவம்பர் 01 ஆம் திகதி) வெள்ளிக்கிழமை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நவம்பர் 01 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், அன்றைய கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 09.11.2024 அன்று நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments