✅👉கொலை குற்றவாளிக்கு 24 வருடங்களின் பின் மரணதண்டனை விதிப்பு..!
காலி மேல் நீதிமன்றில் நீண்ட காலமாக விசாரணை இடம்பெற்று வந்த வழக்கொன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000.02.06 அன்று, இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரட்டுஹேனகொட பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார கம்பியை இழுத்து நபரொருவரை வேண்டுமென்றே மின்சாரம் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் இமதுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட கால வழக்கு விசாரணையின் பின்னர் நேற்று (16) மரண தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments