✅👉உலக உணவு தினம்‌ - 2024

✅👉உலக உணவு தினம்‌ - 2024

✅👉உலக உணவு தினம்‌ - 2024


உலக உணவு தினம்‌ - 2024


உலகில்‌ உள்ள அனைத்து உயிர்களும்‌ உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான்‌. நோய்‌ நொடியின்றி மனிதன்‌ உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத்‌ தான்‌ நமக்கு கிடைக்கின்றது. 

அத்தகைய உணவை சிறப்பிக்க உலக உணவு தினம்‌ (World Food Day ) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்‌16ஆம்‌ திகதி கொண்டாடப்படுகிறது.

இது உணவுப்‌ பாதுகாப்பு மற்றும்‌ உலகம்‌ முழுவதும்‌ உணவுப்‌ பஞ்சத்தை ஒழிக்க விரும்பும்‌ நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்நாளை உணவு மற்றும்‌ வேளாண்மை அமைப்பு ( (FAO - Food and Agriculture Organization)) 1945ல்‌ நிறுவப்பட்டதை நினைவுகூரும்‌ வகையில்‌ கொண்டாடுகிறோம்‌.பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும்‌ மில்லியன்‌ கணக்கான மக்களின்‌ நிலைமையை உலகிற்கு உணர்த்துவதே இதன்‌ முக்கிய நோக்கம்‌ ஆகும்‌ .

உலகின்‌ பல பகுதிகளில்‌ இன்றும்‌ பல கோடி மக்கள்‌ போதுமான உணவு இன்றி தவிக்கின்றனர்‌. 

குழந்தைகள்‌ வளர்ச்சி குன்றியும்‌, பெரியவர்கள்‌ நோய்வாய்ப்பட்டும்‌ இருக்கின்றனர்‌. 

இது வெறும்‌ புள்ளிவிவரம்‌ மட்டுமல்ல, மனித நேயத்திற்கு எதிரான ஒன்று. உலக உணவு இனம்‌, இந்த பிரச்சனையை

உலகின்‌ கவனத்திற்கு கொண்டு வந்து, தீர்வு காணும்‌ வழிகளைத்‌ தேடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைஇஒறது. 

உலக சுகாதார அமைப்பின்‌ கணக்குகளின்படி, சுமார்‌ 800 மில்லியன்‌ மக்கள்‌ போதிய உணவைப்‌ பெறவில்லை என்கின்றது.

ஒரு சத்தான உணவில்‌ கார்போஹைட்ரேட்டுகள்‌, புரதங்கள்‌, கொழுப்புகள்‌, நார்ச்சத்து, வைட்டமின்கள்‌ மற்றும்‌ தாதுக்கள்‌ ஆகியவற்றின்‌ சீரான கலவை உள்ளது, இவை அனைத்தும்‌ உங்களை ஆரோக்‌இயமாகவும்‌ உங்கள்‌ தினசரிகலோரி நுகர்வுடன்‌ கண்காணிக்கவும்‌ தேவை. 

கூடுதலாக ஒரு நன்கு சீரான உணவு, உடல்‌ இறம்பட செயல்பட குறிப்பிட்ட தேவைகள்‌ உள்ளன, ஊட்டச்சத்து குறைபாடு மில்லியன்‌ கணக்கான மக்களின்‌ ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது, வளர்ச்சி மற்றும்‌ வளர்ச்சிக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. 

அதனால்தான்‌ உணவுப்‌ பாதுகாப்பையும்‌, இரகத்தில்‌ உள்ள அனைவருக்கும்‌ சத்தான உணவுகள்‌ இடைப்பதையும்‌ உறுதிசெய்ய இந்தப்‌ பிரச்சனையில்‌ கவனம்‌ செலுத்துவது மிகவும்‌ முக்கியமானது.

2024-ஆம்‌ ஆண்டிற்கான கருப்பொருள்‌ 

2024-ஆம்‌ ஆண்டிற்கான உலக உணவு தினத்தின்‌ கருப்பொருள்‌ "நல்லதொரு வாழ்வுக்கும்‌ நல்லதொரு வருங்காலத்துற்கும்‌ உணவுக்கான உரிமையைக்‌ கொண்டிருத்தல்‌" என்பதாகும்‌. 

இது உணவு என்பது வெறும்‌ உடல்‌ தேவை மட்டுமல்ல, ஒரு நல்ல வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துகிறது.

இன்று உலக நாடுகள்‌ தேசிய மட்டத்திலும்‌ சர்வதேச மட்டத்திலும்‌ (National level and international level) பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு முகம்‌ கொடுத்து வருகின்றது. 

 அந்தவகையில்‌ இன்றைய உலக நாடுகள்‌ முகம்‌ கொடுக்கும் மிகப்பிரதான பிரச்சினைகளில்‌ ஒன்றாக உணவு பிரச்சினையும்‌ அதன்‌ பாதுகாப்பும்‌ (Food problem and its security) இனம்‌ காணப்பட்டுள்ளன.

உலக உணவுப்‌ பிரச்‌சினையின்‌ காரணங்கள்‌:

உலகின்‌ பல பகுதிகளில்‌ உணவுக்‌ குறைபாட்டிற்கு பல காரணங்கள் இருக்கின்றன அவற்றுள்‌ சில கிழே !

இயற்கை பேரழிவுகள்‌: பெரும்பாலான இடங்களில்‌ வெள்ளம்‌, பஞ்சம்‌, பூகம்பம்‌ போன்ற இயற்கை அனர்த்தங்கள்‌ நிலவுகின்றன.

உலக அளவில்‌ 2015ம்‌ ஆண்டுக்குள்‌ பட்டினி அவலத்தைப்‌ பாதியாக குறைப்போம்‌ என்று உலகத்‌ தலைவர்கள்‌ உறுது பூண்டனர்‌. ஆயினும்‌ இந்த எண்ணிக்கை மென்மேலும்‌ அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்‌.

இந்நொடியிலும்‌ உலஇல்‌ உணவு இடைக்காமலும்‌, போதிய போசாக்கின்மை காரணமாகவும்‌ பல்லாயிர கணக்கான குழந்தைகள்‌ உயிரிழந்து கொண்டிருக்கிறமை பெரும்‌ அவலமாகும்‌.

உணவு நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணங்களில்‌ ஒன்றாக உள்நாட்டு மற்றும்‌ நாடுகளுக்கிடையில்‌ ஏற்பட்டு வருஇன்ற யுத்த நடவடிக்கைகள்‌ (Internal and inter-state war) குறிப்பிடப்படுகின்றன.

2023 ஆம்‌ ஆண்டு காலப்பகுஇயில்‌ பிரகடனப்படுத்தப்பட்ட ரஷ்யா உக்ரைன்‌ நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தின்‌ (War between Russia and Ukraine) காரணமாக ஆப்பிரிக்க நாடுகள்‌ பல்வேறு வகையான இரமத்தை எதிர்நோக்‌இன குறிப்பாக 2011 ஆம்‌ ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தை காட்டிலும்‌ 2023 ஆம்‌ ஆண்டுகளில்‌ பாரியளவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உலக உணவுத்‌ திட்டத்தின்‌(World Food Programme) அறிக்கையின்படி 3 லட்சத்து 86 ஆயிரம்‌ மக்கள்‌ ஊட்டச்சத்து குறைபாட்டால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌ என்கிறது.

அரசியல்‌ நிலைத்தன்மை இல்லாமை: அரசியல்‌ மோதல்கள்‌ மற்றும்‌ போராளிகளால்‌ நிலப்பகுதிகள்‌ அழிவுக்கு உள்ளாக, விவசாய உற்பத்தி குறைவடைகிறது. நாட்டின்‌ ஆட்சிக்கு வரும்‌ அரசாங்கங்களால்‌ கொண்டுவரப்படும்‌ பொருளாதாரக்‌ கொள்கைகளும்‌(economic policies) செயற்பாடுகளும்‌ உணவு நெருக்கடிக்கு காரணமாய்‌ அமைகின்றன எடுத்துக்காட்டாக,

1970 ஆம்‌ ஆண்டு காலப்பகுதிகளில்‌ இலங்கையின்‌ பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா(Sirimavo Bandaranaike) அவர்களினால்‌ மூடிய பொருளாதாரக்‌ கொள்கை (Closed economic policy) இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூடிய பொருளாதாரமென்னும்‌ போது சுய பூர்த்தியினை அடிப்படையாகக்‌ கொண்டு வெளிநாட்டில்‌ இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களையும்‌ கட்டுப்படுத்தி உள்நாட்டிலேயே வர்த்தகம்‌ கல்வி கைத்தொழில்கள்‌ விவசாயம்‌ உணவு உற்பத்து என்பனவற்றை பெருக்குதல்‌ ஆகும்‌.

பொருளாதாரக்‌ கொள்கை இலங்கையில்‌ உணவு தட்டுப்பாடு, உணவு நெருக்கடி,பண வீக்கம்‌, தொழிலின்மை,வறுமை,பட்டினி சாவு,கொள்வனவு சக்தி ,மக்களுக்கிடையே திருட்டு கொள்ளை,அரசியல்‌ நெருக்கடி என பல்வேறு வகையான சுமைகளை ஏற்படுத்தியது.

ஆசிய கண்டத்தில்‌ அதிகமான மூல வளங்களை கொண்டிருந்த இலங்கை இத்தகையதொரு மூடிய பொருளாதாரக்‌ கொள்கையினால்‌ மிகவும்‌

பின்தங்‌கிய நாடுகளின்‌ பட்டியலில்‌ இணைந்தது.

இதனைப்‌ போலவே முன்னாள்‌ ஜனாதிபதி கோத்தாபாய ராஜபகூடி (Gotabaya Rajapaksa) காலத்தில்‌ இலங்கையில்‌ கொண்டுவரப்பட்ட இரசாயனப சளைகளை நீக்கி இயற்கை பசளைகளை உபயோகிப்போம்‌ என்ற கொள்கையில்‌ வெளிநாடுகளில்‌ இருந்து இறக்குமதி செய்யப்படும்‌ உரவகைகளை நிறுத்தியமை காரணமாக இலங்கையின்‌ பொருளாதாரம்‌ பாரிய அளவில்‌ வீழ்ச்சியை கண்டது.

நாம்‌ என்ன செய்யலாம்‌?

உணவை வீணாக்காமல்‌ இருத்தல்‌: உணவு மீதான மதிப்பை அதிகரித்து,

உணவை வீணாக்குவதைத்‌ தவிர்க்கலாம்‌.

உள்ளூர்‌ உணவுகளை ஊக்குவித்தல்‌: உள்ளூர்‌ விவசாயிகளிடம்‌ இருந்து உணவுகளை வாங்குவதன்‌ மூலம்‌, அவர்களை ஆதரித்து, உணவுப்‌ பொருட்களின்‌ பயணத்தை குறைக்கலாம்‌.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது: ஆரோக்‌கியமான உணவுப்‌ பழக்கங்களை கடைபிடிப்பதன்‌ மூலம்‌, நம்மை நாமே பாதுகாத்து, சமூகத்திற்கும்‌ பங்களிக்கலாம்‌.

விழிப்புணர்வை ஏற்படுத்துதல்‌: உங்கள்‌ நண்பர்கள்‌, குடும்பத்தினர்‌ மற்றும்‌ சமூக வலைதளங்களில்‌ உலக உணவு தனம்‌ பற்றி பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்‌.

தன்னார்வப்‌ பணிகளில்‌ ஈடுபடுதல்‌: உணவு வங்‌கிகள்‌, உணவு விநியோக திட்டங்கள்‌ போன்றவற்றில்‌ தன்னார்வப்‌ பணிகளில்‌ ஈடுபடலாம்‌.

உலக உணவு தனம்‌ வழங்கும்‌ செய்தி:

உலக உணவு தினம்‌ ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, இது சமூகத்தின் ஒவ்வொருவருக்கும்‌ தொடர்புடையதாக உள்ளது. உணவு பஞ்சத்தை ஒழிக்க, அரசாங்கங்கள்‌, அறக்கட்டளைகள்‌, தொழில்துறைகள்‌, விவசாயிகள், நுகர்வோர்‌ என அனைவரும்‌ ஒருங்‌இணைந்து செயல்பட வேண்டும்‌. உலகில் அனைவருக்கும்‌ உணவு இடைக்கும்‌ வரை இந்த போராட்டம்‌ தொடர வேண்டும்‌ என்பது இந்நாளின்‌ முதன்மையான செய்தியாகும்‌.

உலக உணவு தினம்‌ பசி , சத்துக்குறை, உணவின்‌ மிச்சத்தை தவிர்த்தல்‌ போன்றவற்றைப்‌ பற்றி அனைவருக்கும்‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்‌, நம்மால்‌ உணவுப்‌ பாதுகாப்பிற்காக என்ன பங்களிக்கலாம்‌ என்பதையும்‌ சிந்திக்கச்‌ செய்கிறது. அதிகமான உணவுகளை வீணாக்காமல்‌ பயன்படுத்துதல்‌, சுய விவசாயத்திற்கு ஊக்கமளித்தல்‌ போன்றவை சிறியதாய்‌ தோன்றினாலும்‌, உலக அளவில்‌ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்‌ கூடியவை.

நிர்ணயமாக, உலக உணவு தினம்‌ அனைத்து மக்களும்‌ போதுமான மற்றும்‌ சத்து மிக்க உணவை உட்கொள்ள முடியும்‌ என்பதற்கான ஆவலுடன்‌ செயல்படுவதற்கு நம்மைத்‌ தூண்டும்‌ ஒரு வாய்ப்பாகும்‌.

Post a Comment

0 Comments