✅👉இணையவழி மோசடி – 130 சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு..!
இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி – குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த 130 சீன பிரஜைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments